Members Login



Online Users

We have 1 guest online

Copy Right by Zonal Education Office, Mannar
வலய தமிழ் தினப் போட்டி PDF Print E-mail
Wednesday, 04 April 2012 10:45

மன்னார் வலயத்தின் 2012ம் ஆண்டிற்கான தமிழ்த்தினப் போட்டிகள் மார்ச் மாதம் 9ம் , 10ம், 11ம் திகதிகளில் மன்.அல்அஷ்ஹர் மகாவித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் மன்னார் வலயப் பாடசாலைகள் பலவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...
 
மன்னார் கல்வி வலயத்தில் நான்கு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி PDF Print E-mail
Wednesday, 04 April 2012 07:26

கடந்த வருட டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சா.த) பரீட்சையில் மன்னார் வலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A தரச் சித்தியைப் பெற்றுள்ளனர். இவர்களை வலயத்தின் சார்பில் வாழ்த்திநிற்கின்றோம்.

 

No. Name of Student School Medium
01. Mas.J. Emil Roshington Mn/St. Xavier's Boys' College Bilingual
02. Miss. G. Mary Sureska Mn/St. Xavier's Girls' College Bilingual
03. Mas.J. Y. R. Shihan Croos Mn/Fatima M.M.V. Tamil
04. Miss. M. A. Fathima Nifaya Mn/Al-Mina M.V. Tamil
 
ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப செயலமர்வு PDF Print E-mail
Tuesday, 28 February 2012 03:40

ஆரம்பப் பிரிவில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும், ஆரம்பப்பிரிவு வகுப்புக்களின் கற்றல் செயற்பாடுகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான இரு நாட்கள் கொண்ட செயலமர்வு பெப்ரவரி 24, 25 ஆம் திகதிகளில் மன். புனித லூசியா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் 35 ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 
கல்விச் செயலாளர் மன்னார் வலய கல்வி அலுவலகர்களைச் சந்தித்தார் PDF Print E-mail
Wednesday, 15 February 2012 07:16

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு கூட்டம் ஒன்றிற்கு வருகை தந்திருந்த வடமாகாண கல்விச் செயலாளர் கௌரவ திரு. எஸ். சத்தியசீலன் அவர்கள் 15.02.2012 புதன்கிழமையன்று மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன் கல்வி அபிவிருத்திக் கூட்டத்திலும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Read more...
 
சாரணர் நூற்றாண்டு விழாவின் சமய நிகழ்வு PDF Print E-mail
User Rating: / 1
PoorBest 
Wednesday, 08 February 2012 10:14

இலங்கையில் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு நூறாவது ஆண்டு விழாவை ஒட்டிய சமயநிகழ்வுகளில் கிறிஸ்தவ சமய நிகழ்வானது மடு தேவாலயத்தில் 04.02.2012 சனிக்கிழமையன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்ட சாரண சங்கத்தினரும், மன்னார் மாவட்ட சாரண சங்கத்தினரும் இணைந்து பங்குபற்றினர்.

இதில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சாரணர்கள் 68 பேரும் மன்னார் மாவட்டச் சாரணர்கள் 192 பேரும் பங்குபற்றினர். இதில் மடு பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களும் , மன்னார் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. ம. லியோன் றெவல் அவர்களும், மன்னார் மாவட்ட சாரண ஆணையாளர் திரு. றாஜேந்திரன் அவர்களும், கொழும்பு சாரண சங்கத்தின் அதிகாரிகளும் வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் அதிகாரிகளும், அநேக சாரண ஆசிரியர்களும் பங்குபற்றினர்

 

Read more...
 
வலய கல்வி அபிவிருத்திக் கூட்டம் PDF Print E-mail
Thursday, 26 January 2012 06:15

இவ்வாரத்திற்கான கல்வி அபிவிருத்திக் கூட்டமானது வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் 25.01.2012 புதன் கிழமையன்று காலை 9.00 மணிதொடக்கம் மதியம் 1.00 மணிவரை வலய மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இதில் கல்வி அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் அரச அலுவலகர்களுக்காக தேசிய மட்டத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஆங்கில மொழி மூலத்தில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஆங்கில வளநிலைய வளவாளர் திரு. எஸ். ஏ. குரூஸ் அவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்

 

Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3

Our Emblem